सुनीतिकुशुममाला (तिरुक्कुरळ्) श्री चक्रपाणि धर्मः। பதிப்பாசிரியர் குறிப்பு
Home | Contents

அடுத்தானை உரித்தானை அருச்சுனற்குப் பாசுபதம் கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு தொடுத்தானைப் புரமெரியச் சுனைமல்கு கயிலாயம் எடுத்தானைத் தடுத்தானை என்மனத்தே வைத்தேனே. (தேவாரம்) டாக்டர் ஐயரவர்களின் கல்விப்பெருமையைக் கேட்டு மகிழாதார் தமிழ்நாட்டில் இல்லை. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்களிடம் தமிழ்த்தேர்ச்சிபெற்ற நல்லறிஞர்களுள் ஐயரவர்களைப்போல் தமிழகத்திற்கு என்றும் நிலைபெறும் வண்ணம் தமிழ்த்தொண்டு செய்த பெரியார் வேறு ஒரு வ ரு மிலர். கல்விச்செல்வத்தைக் கணக்கிடற்கரிய தமிழ்மாணவர்கட்கு இடைவிடாமல் போதித்து வந்தார்கள். "தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்" என்ற தெய்வப்புலவர் வாக்கிற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் ஐயரவர்கள். சாந்தமும், தம்மை வியவாமையும், தாமறிந்த அரிய கருத்துக்களைத் தம்மிடம் பாடங்கற்கும் மாணவர்கட்கும், ஏனையோர்க்கும் சொல்லி மகிழ்ச்சியடை யும் சீலமும், பிறரைப் பாராட்டலும், அழுக்கா றின்மையும், யாவரிடமும் அன்பு பாராட்டும் குணமும், ஒரு நிமிடமும் வீண்பொழுதுபோக்காமல் கல்வித்துறையில் மேன்மேல் ஆராய்ச்சி செய்துவருதலும், ஆழ்ந்த ஆசிரிய பக்தியும், "அந்த தெய்வபக்தியும் கொண்டு ஐயரவர்கள் திகழ்ந் ""கள். தமிழ்க்கலையில் நிகரிலாப் புலமை பெற்று விளங்கு அன்று அறிந்து அகத்தியருக்குத் தமிழ் இலக்கணம் உபதேசித்த முருகப்பெருமானின் பெயராகிய 'சாமிநாதன்' - என்ற பெயரை மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் ஞானக்கண்ணால் அறிந்து ஐயரவர்களுக்கு வைத்தனர்போலும். ஐயரவர்கள் பெயரால் இலங்கிவரும் நூலகத்தில் 1961 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி சுவடியி லிருந்து கொண்டப்ப வாத்தியார் உரையுடன் திருக்குறள் நூல் நிலைய வெளியீடாக வெளியிடப்பட்டது. இப்பொழுது திருக்குறள் ஸம்ஸ்கிருத மொழி பெயர்ப்பினை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். திருக்குறளின் பெருமை. திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றாத புலவர்கள் இல்லை. ஐயரவர்கள் எழுதிய "திருவள்ளுவரும், திருக்குறளும்" என்னும் உரைநடை நூலில் திருக்குறளின் சிறப்பினை நன்கு விளக்கியிருக்கின்றார். அந்நூலில் '' தமிழ் மணம் வீசாத இடத்திலும் திருக்குறளின் மணம் வீசுகின்ற தென்று கூறுதலே பொருத்தமாகத் தோற்றுகின்றது. ஏனெனின் தமிழ் வழங்காத பிற நாடுகளிலுள்ள அறிஞர்கள் திருக்குறளின் மொழிபெயர்ப்புக்களைப் படித்து இன்புறு கின்றார்கள். அங்கே தமிழ் மணம் ஏது? நாமெல்லோரும் தமிழையறிந்து அதன் மூலம் குறளை அறிகின்றோம். அவர்கள் குறளின் பொருளையறிந்து அதன் மூலம் தமிழைப்பற்றி அறிந்து கொள்கிறார்கள் !! என்று ஐயரவர்கள் கூறியிருக் கிறார். மேலும் அவர்கள் சங்ககாலத்துப்புலவர்களையும், நூல்களையும் முற்காலத்தினரும், பிற்காலத்தினரும் வழங்கும்போது ' திரு ' என்னும் அடை மொழி கொடுத்து வழங்கியதாகக் காணோம். ஆயினும் வள்ளு வரையும் குறளையும் திருவள்ளுவர் என்றும், திருக்குறள் என்றும் கூறுகின்றோம். திரு என்பதற்குத் திருக்கோவையாரின் உரையில் பேராசிரியர் கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்று உரைகூறுகின்றார். வள்ளுவரும் அவர் வாய்மொழியும் யாவராலும் ஒருங்கே விரும்பப்படுவதனால் திருவென்னும் அடை மிக்க பொருத்த முடையதே. இவருக்கு அமைந்த பலபெயர்கள் இவருடைய சிறந்த இயல்புகளை வெளிப்படுத்துகின்றன. என்று ஐயரவர்கள் கூறியிருக் கின்றார். இந்நூலின் சிறப்பினை விரிக்கில் பெருகும். அறிவுலகில் இந்நூலின் பெருமையை அறியாதார் ஒருவருமிலர். இந்நூலினைப் போன்றதொரு நூல் எம்மொழியிலும் இல்லை என்று பல மேதைகள் கூறுகின்றனர். இந்நூலினைப் பல மொழிகளில் மொழி பெயர்த்துள்ளார்கள். வட மொழி யில் ஐயரவர்கள் சம்பந்தியும், ஐயரவர்கள் குமாரர் திரு. கலியாணசுந்தரையர் அவர்கள் மாமனாருமான தியாக சமுத்திரம் ஸ்ரீ சக்ரபாணி ஐயர் அவர்கள் வடமொழி சுலோகங்களாக இற்றைக்கு 125 ஆண்டுகளுக்கு முன்பே குறள் முழுவதையும் நன்னடையில் மொழி பெயர்த் துள்ளார்கள். இந்நூலினைப்படிப்போருக்கு, உள்ளங்கை இலந்தைக்கனி போல் (போஜசம்பு பிரயோகம்) நன்கு விளங்கும். திரு, சக்ரபாணி ஐயரவர்கள் நாகப்பட்டினம் தேசீய உயர்தரப் பாடசாலையில் சம்ஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றியவர். அவருக்கு ஆங்கிலம், ஹிந்தி, உருது, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சிறந்த பாண்டித்யம் உண்டு. இராமாயணம், பாரதம், பாகவதம் போன்ற நூல்களை இனிமையான சாரீரத்தோடு பல்லாயிரக் எக்கணக்கான மக்கள் மகிழும்படி சொற்பெருக்கு ஆற்றும் வல்லமையும் இவரிடத்தில் இருந்தது. இமயம் முதல் கன்னியாகுமரி வரை பல க்ஷேத்திரங்களைத் தரிசித்துள்ளார். பல முஸ்லீம் அன்பர்களுக்கு உருது பாடம் சொல்லிக் கொடுத்தமையால் உருது முன்ஷி என்ற பட்டத்தைப் பெற்றிருந்தார். ஆனந்த வருஷம் கார்த்திகை மாதத்தில் மோக்ஷ சாம்ராஜ்ய பதவியை அடைந்தார்கள். 17-1-1914 திருச்செந்தூரிலிருந்து மு. கிருஷ்ணன் என்பர் ஐயரவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் திரு சக்ரபாணி - ஐயரவர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். "சில தினங்களுக்கு முன்பு நாகப்பட்டினம் ஸ்கூல் சம்ஸ்கிருத உபாத்தியாயராகிய தங்கள் சம்பந்தி இவ்விடம் சுவாமி தரிசனம் செய்ய தி. வி. ஜில்லா ரிஜிஸ்டிரார் அவர்கள் மூலமாகச் சப்ரிஜிஸ்டிரார் மதுரை நாராயணசாமி ஐயரவர்கள் கிருகத்தில் வந்து தங்கி இருதினம் சுவாமி தரிசனம் செய்து, அதனால் பரமானந்த பரவசராகித் தரிசன மகிமையை வியந்துபேசி இத்தகைய ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுளைத் தரிசித்தற் பொருட்டு, இந்த மாசி உத்ஸவத் திற்குத் தங்களை அவசியம் அழைத்து வருவதாகவும் சொல்லிப்பிற்றை நாட்காலையில் மோட்டார் ஏறிப் புறப்பட்டு விட்டார்கள். அவர்கள் போன பின்னர்தான் அவர்கள் வந்துபோன விஷயம் யான் அறிந்தேன். அவர் சிறந்த யோகி போன்றவர் என்றும், சித்த சமாதானமும், உபசாந்தமும் உடையாரென்றும் மனுஷ்யனுக்கு வேண்டிய உத்தம குணம் அமையப்பெற்றவர் என்றும் அறிந்தேன்' என்று. இவர் பல சம்ஸ்கிருத நூல்களை எழுதியுள்ளார்கள். ஆனால் இப்பொழுது எங்குள்ளன என்று தெரியவில்லை. இந்நூலினை அச்சிடவேண்டும் என்று ஐயரவர்கள் பேரர் திரு. க. சுப்பிரமணிய ஐயர் காலஞ்சென்ற சம்ஸ்கிருதப் பேராசிரியர் டாக்டர் ராகவன் அவர்களிடம் கொடுத்தார். என்ன காரணத்தினாலோ அவர் காலத்தில் அச்சிடப்படாமல் போய்விட்டது. திரு. க. சுப்பிரமணிய ஐயர் தன் மாதாமகராகிய திரு. சக்ரபாணி ஐயரவர் களின் புகழை நாடறிய வேண்டும் என்ற கருத்துடன் இந்நூலை அச்சிட ஊக்குவித்து அதற்கு வேண்டிய முயற்சியை எடுத்துப் பலனுறச் செய்தார். இந்நூல் நிலையம் திருமதி ருக்மிணி தேவியார் அவர்களுடைய ஊக்கத்தினாலும் ஆக்கத்தினாலும் சிறந்த முறையில் வளர்ந்து வருகின்றது. இந்நூல் வெளி வருவதற்குப் பல வகையில் உதவிய டாக்டர் ஆர். நாகசாமி அவர்களுக்கு நன்றி. சிறந்த முறையில் வெளிவரக் குப்புசாமி சாஸ்திரியார் ஆராய்ச்சி நிலையப் பாதுகாவலர் டாக்டர் ஜானகி அவர்கள் சம்ஸ்கிருத சுலோகங்களைத் திருத்திக் கொடுத்த தோடன்றி நூலினுக்கு முகவுரையும் அளித்துள்ளார்கள். அன்னாருக்கு நூல் நிலையத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலை நன்முறையில் அச்சிட்டளித்த திரு. டி. வி. ரமணி சகோதரர்கள் அவர்களுக்கு நன்றி. மத்திய அரசு இப்பதிப்பு வெளிவருவதற்குப் பெருமளவு மானியம் அளித்தமைக்கு நன்றி. திருவான்மியூர் வித்துவான் சு. பாலசாரநாதன். ஆராய்ச்சித் துறைப் பிரிவு டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம். அர் 01-08-1983